எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 86

தமிழ்ப் பேரவை பங்கெடுத்த சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2013 NUS Tamil Language Society - A Friend of the Singapore Writers’ Festival 2013 ஒவ்வொரு ஆண்டும் தேசிய கலை மன்றம் (National Arts Council) சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை நடத்திக்கொண்டு வருகிறது. உலகில் உள்ள இலக்கிய திறன்களை ஒன்றிணைப்பதே இவ்விழாவின் முக்கிய ந�ோக்கமாகும். ஆசியாவில் இவ்விழா மிகப் பிரபலமாகவும் புகழ்வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. ஏனெனில், சிங்கப்பூர் பல இனம் சார்ந்த நாடாக திகழ்வதால் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ ம�ொழிகளிலும் பற்பல நிகழ்ச்சிகளை இயக்கி ஒருங்கிணைத்து மக்களிடம் வழங்கப்படுகிறது. இதுவே இவ்விழாவின் சிறப்பு அம்சமாகும். சென்ற ஆண்டு 2013-ல், நவம்பர் மாதம் 1 முதல் 10 வரை சிங்கப்பூர் எழுத்தாளர் விழா நடைபெற்றது. சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை இவ்விழாவின் தமிழ் கூறை மேடையேற்ற தன் பணியை ஆற்றியது. தமிழவேள் க�ோ. சாரங்கபாணியும், பற்பல சிறந்த எழுத்தாளர்களும் தமிழ் முரசில் எழுதிய சிறு கதை, கவிதைகளை த�ொகுப்பாக "இலக்கியம் வளர்த்த தமிழவேள் சாரங்கபாணி" என்ற ஒரு புத்தகம் தேசிய கலை மன்றத்தால் வெளியிடப்பட்டது. அக்கதைகளும், கவிதைகளும் தமிழ் ம�ொழியின் அழகுணர்ச்சியையும், தன்மையையும் மக்களுக்கு எடுத்துக் காட்ட ஐந்து தமிழ்ப் பேரவை செயற்குழு 84 NUS Tamil Language Society 35th Executive Committee உறுப்பினர்கள் நாடகம் வாயிலாக எடுத்துரைத்தனர். இக்கூறை நிகழ்த்த இராஜா அரவிந்த் ராஜ் நிகழ்ச்சி த�ொகுப்பாளராக இருந்தார். நா. க�ோவிந்தசாமி எழுதிய "கானல் நீர்" என்ற சிறு கதையை ரியாஸ் அப்துல் ரஹீமும், அருணா அனந்த சயணமும் அழகிய அபினையங்கள�ோடு நடித்து ப�ொதுமக்களை மெய் மறக்க செய்தனர். ம கணேஷ்குமாரும், ம பிரகாஷும் அச்சிறுகதைக்கு உணர்ச்சியுடன் எடுத்துரைத்தனர். அதன்பிறகு, ஐ. உலகநாதன் எழுதிய "ஏது விடுதலை" என்னும் கவிதையை அருணா அழகாக வாசித்தார். தமிழவேள் க�ோ. சாரங்கபாணியின் வரலாற்றையும் சிங்கப்பூரில் இந்திய சமுதாயத்தை ஒருங்கிணைத்ததைப் பற்றியும் தமிழ்ப் பேரவைத் தலைவர் இர்ஷாத் முஹம்மது ஒரு கண்காட்சியை உருவாக்கினார். இக்கண்காட்சிக்கு அவர் மேற்பார்வையாளராகவும் இருந்து ஒருங்கிணைத்தார். இக்கண்காட்சியைக்கண்டு தமிழவேள் க�ோ. சாரங்கபாணி பற்றியும் அவரின் சாதனைகளைப் பற்றி மேலும் தெரிந்துக�ொண்டதால் மக்களிடமிருந்து நற்பல ஆதரவு கிடைத்தது. தமிழ் ம�ொழியை பாதுகாக்கவும் வளர்ப்பதற்காகவும் முன் வந்துள்ள இளைஞர்களின் முயற்சியை கண்டு இச்செயல்திறனுக்கு அதிக அங்கீகாரமும் ஆதரவும் மக்களிடமிருந்து கிடைத்தது. இது தமிழ்ப் பேரவைக்கு ஒரு பெரும் ஊக்குவிப்பாக இருந்தது. இந்த பங்கேற்புக்கு வாய்ப்பளித்த தே