எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 85

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடங்கள் பாட எண்கள்: SN2275 Tamil Studies 1 SN3275 Tamil Studies 2 தெற்கு ஆசியாவை மையமாகக் கொண்டு கற்பித்தல், ஆய்வு, ஏனைய தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவற்றை வளர்க்க, சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக் கழகம் தன் கலை, சமூக அறிவியல் புலத்தில் (Faculty of Arts and Social Sciences) தெற்கு ஆசிய இயல் பிரிவைத் தொடங்கியது. இந்தப் பிரிவின்கீழ் தமிழ் மொழி கற்பிக்கும் பாடங்களும் (Tamil Language Modules) 2004ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. தற்போது இந்தத் தமிழ் மொழிப் பாடங்கள் கலை, சமூக அறிவியல் புலத்தின் மொழி தேர்ச்சி நிலையத்தில் (Centre for Language Studies) அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்தத் தமிழ் மொழிப் பாடங்களைக் கட்டாயப் பாடங்களாகவும் (Essential Modules) விருப்பப் பாடங்களாகவு (Elective Modules) எடுத்துப் படிக்கலாம். தமிழ்மொழிப் பாடங்கள் இருவகை மாணவர்களுக்கும் ஏற்பப் பயிற்றுவிக்கப்படுகிறது. "H1" அல்லது "H2" நிலைத் தேர்ச்சி பெற்றத் தமிழ் மாணவர்களும், உயர்நிலைப் பள்ளியில் உயர்தமிழ் தேர்ச்சி பெற்ற தமிழ் மாணவர்களும் தங்கள் தமிழ்மொழித் திறனையும் அதன் மீது கொண்டுள்ள பற்றையும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் தமிழ்மொழிப் பாடங்கள் அமைகின்றன. தமிழியல் ஒன்று (Tamil Studies 1) மற்றும் தமிழியல் இரண்டு (Tamil Studies 2) என்னும் பெயரில் மொழி தேர்ச்சி நிலையத்தின் கீழ் நடக்கின்றன. இரு பாடங்களிலும் இலக்கணக் கூறுகளை விரிவாகப் புரிந்துகொள்தல், நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்களைப் படித்துப் புத்தகத் திறனாய்வு செய்தல் மற்றும் பக்தி இலக்கியம், சங்க இலக்கியம் போன்றவையும் மாணவர்களுக்கு இப்பாடங்களின் வழி கற்றுத் தரப்படுகின்றன. உச்சரிப்புப் பிழை இல்லாமல் பேசும் திறன், பல்வேறு சூழல் பேஸ்சுக்களைக் கேட்டுணரும் திறன், தமிழை மொழியியல் (Linguistic) நோக்கிலும் பண்பாட்டு நோக்கிலும் பார்த்தறியும் திறன், மொழி பெயர்க்கும் திறன், மேடைப்பேச்சாற்றல் திறன் முதலிய திறன்களைத் தமிழ்மொழிப் பயிலும் மாணவர்கள் இப்பாடங்களின் மூலம் வளர்த்துக் கொள்கிறார்கள். இப்பாடங்கள் ஒவ்வொன்றும், வாரத்திற்கு இரண்டு மணி நேர விரிவுரையாகவும் இரண்டு மணி நேரத் துணை வகுப்பாகவும், 13 வாரங்களுக்கு நடக்கின்றன. 2004ம் ஆண்டில் அறிமுகமாகிய இந்தத் தமிழ்ப் பாடங்கள் இன்னும் மாணவர்களிடம் பேராதரவு பெற்று வருகிறது. இவ்விரு தமிழ்ப் பாடங்களை நடத்துபவர் தமிழ்க் கல்வியில் நல்ல அனுபவம் பெற்ற முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள் ஆவார். சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வியை நிரந்தரமாக்கி, அதனை வலுப்படுத்தி மேம்படச் செய்வதற்குத் தமிழ் மாணவர்கள் தங்கள் சேவையை வழங்க வேண்டும். தமிழ்ச் சமுதாயமும் அதற்குத் துணை நிற்க வேண்டும். H T T P : / / W W W.FAS.NU S.E DU .S G/SAS / சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 35ம் செயற்குழு 8 3