செய்தி
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப்
பேரவை, 1975ம் ஆண்டு த�ோற்றுவிக்கப்பட்டது முதல்,
தமிழ் பேசும் சமூகத்தினரிடையே, பாரட்டத்தக்கக்கூடிய
தாக்கங்களை ஏற்படுத்தி வந்துள்ளது. பல்கலைக்கழக
மாணவர்கள் , தங்கள் தனிப்பட்ட இலட்சியங்களையும்
கடந்து; சிந்தனையாளர்களாக, சமூக ஆர்வலர்களாக,
சமுதாயத் தலைவர்களாக உருவாக, பேரவை ஒரு
வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.
நான் தமிழ்ப் பேரவையின் மாநாட்டுச்
சிறப்பு மலர் ஒன்றுக்கு, வாழ்த்துரை வழங்குவது
இது மூன்றாவது முறை. முதலாவதாக, 1982ல்
மாணவராகவும் தமிழ்ப் பேரவைத் தலைவராகவும்
இருந்தப�ோதும்;
இரண்டாவது
ஒரு
ஆய்வரங்க
மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ப�ோதும்;
தற்பொழுது பேரவையின்
ஆல�ோசகர்
எனும்
வகையிலும் எழுதுகின்றேன்.
இடைப்பட்ட இந்த முப்பதிற்கும் மேற்பட்ட
ஆண்டுகளில்,
நம்
சமுதாயத்தின்,
உள்ளேயும்
வெளியேயும், பெரும் மாற்றங்களைக் கண்டு
வந்துள்ளோம் நமது ம�ொழி சார்ந்த சிந்தனைகள்,
தற்காலச் சவால்கள் மற்றும் எதிர்கால இலட்சியங்கள்
உள்ளிட்ட, அனைத்து மட்டங்களிலும் மாற்றங்கள்
த�ொடர்கின்றன. நிகழ்காலம், கடந்த காலத்திலிருந்து
மாறுபட்டிருக்கிறது.
எதிர்காலம்,
நிகழ்காலத்தைக்
8
NUS Tamil Language Society
35th Executive Committee
காட்டிலும் மேலும் வேறுபட்டிருக்கும் எனக் கூறலாம்.
கடந்த காலங்களைப்போல், தமிழ் ம�ொழியின்
பயனீட்டைப்
பற்றியும்,
சமூக அக்கறைக்குரிய
மற்ற
தலைப்புகளைப்
பற்றியும்
ஆய்வரங்கத்தில்
விவாதிக்கவுள்ளோம்.
நாம்,
நம்முடைய
அடிப்படைக் க�ோட்பாடுகளைக் கைவிடாமல்
த�ொடர முனைந்தாலும்; வரும் தலைமுறையினர்,
எதிர்காலத்தைப் பெருமிதத்துடனும், நம்பிக்கையுடனும்
எதிர்கொள்வதற்கு; நமது ம�ொழி, பண்பாடு மற்றும்
நெறிமுறைகள் காணவேண்டிய மேம்பாடுகளைப் பற்றி
மேலும் ஆழமாகவும் அகன்ற பார்வையுடனும் சிந்திக்க
வேண்டிய நிலையில் இருக்கிற�ோம்.
ஆய்வரங்கத்தில் கலந்துக�ொள்ளும் இளையர்
அனைவரும், திறந்த மனதுடனும், ஆக்ககரமான
கருத்துப் பரிமாற்றங்கள் மூலமும், அளவாகப் பேசி,
அதிகமாக உள்வாங்கியும், த�ொடர்ந்து இந்த மாநாட்டுத்
தளம், வரும்
தலைமுறையினருக்கு,
பயன்தரும்
வகையிலும் செயல் பட வேண்டுகிறேன். முன்பெல்லாம்,
இளையரை ஊக்குவிக்க, "வானமே எல்லை" எனத்தான்
கூறுவர். இன்றோ, நம்முடைய "எண்ணமே நமது
எல்லை
எனக் கூறுகின்றோம்".
எதிர்காலத்தைச்
சரியாகக் குறிப்பிட வேண்டுமென்றால்,
அங்கு
"எல்லையே இல்லை" என்றுதான் கருத வேண்டும்.