creativityschool creative corner1 | Page 70

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள்

தாயகட்டம், பல்லாங்குழி, ஐஞ்சாங்கல், நொண்டி, காயா பழமா, காக்காகம்பு, தொட்டுவிளையாட்டு போன்ற பெயர்களை தற்போதுள்ள தலைமுறையினர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.இந்த பெயர்கள் எல்லாம் தமிழர்களின் பழங்கால

விளையாட்டுகள்.

பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா?பழமா?, சூ விளையாட்டு,உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65 விளையாட்டுகள் இருந்தன. இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என 27 விளையாட்டுகளும், சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும்வகையில் தொட்டுவிளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி,குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30 விளையாட்டுகளும், ஆண்கள் மட்டும்விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல், சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், மோடிவிளையாட்டு, பானை உடைத்தல் போன்ற 30 விளையாட்டுகளும்,குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5 விளையாட்டுகள் இருந்தன. அந்நிய முகம் கொண்டு நம் நாட்டு விளையாட்டுக்களை மறந்து விட்டு அந்நிய நாட்டு விளையாட்டுக்களுக்கும்,மின்னணு விளையாட்டு பொருட்களுக்கும் அடிமையாகி நம் பாரம்பரிய விளையாட்டுக்களை துலைத்துவிட்டு நிற்கிறோம். தமிழர்கள் நாம்கண்டுபிடித்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதிற்கும், நம் உடலிற்கும் நன்மைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது. இன்று நாம் விளையாடும் எந்த ஒரு விளையாட்டும் நமக்கு உடல் ஆரோக்கியத்தையும், மனநிம்மதியையும் அளிப்பதில்லை. மட்டைபந்து விளையாட்டில் இந்தியா படுதோல்வி, இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்திகள் தான் நம் காதுகளுக்கு எட்டுகிறது அந்நிய விளையாட்டு மோகத்தால். பல்லாங்குழி விளையாடினால் நீண்ட நாள் சளித்தொல்லை, கண்பார்வை போன்ற பிரச்சனைகள் குணமடையும் ஆனால்

பல்லாங்குழி ஆட வேண்டிய கைகள் இன்று செல் போனிலும், கம்புயுடரிலும் பட்டங்களை தட்டிக்கொண்டிருக்கிறது. 40 - 50 வயதில் கண்ணாடி மாட்டிக்கொண்ட காலம் போய் 4 – 14 வயதிலேயே கண் பார்வை கோளாறுகளால் கண்ணாடிகள் மாட்டிவிட்டோம் நம் பிள்ளைகளுக்கு. வருடா வருடம் நம் பிள்ளைகளில் பிறந்தநாளுக்கு விடியோ கேம்ஸ், பிளே ஸ்டேஷன் என்று வாங்கி கொடுப்பதை நிறுத்திவிட்டு நம் பாரம்பரிய விளையாட்டுக்களையும், விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க

முயற்சி செய்யுங்கள். அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்கால தமிழர்

விளையாட்டுகளை இனியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்போம்.

65