creativityschool creative corner1 | Page 69

கோயம்புத்தூர் மாவட்டம் பண்டைய காலம் தொட்டு கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது.

இப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தென்னிந்திய மாநிலமான தமிழ்

நாட்டில் சென்னைக்கு, அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின்தலைமை யிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2. 1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

•ஊட்டி - (90 கி.மீ. வடமேற்கு): மிகப் புகழ்பெற்ற மலை வாழிடம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.

•குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.

•முதுமலை வனவிலங்கு காப்பகம்: ஊட்டி வழியாகத் தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம் இதுவாகும்.

•மலம்புழா அணை: பாலக்காடு அருகில் உள்ளது.

•ஆனைமலை:

•பழனி - (100 கி.மீ., தெற்கு): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.

•அமராவதி அணை: முதலைப் பண்ணை

•திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி

•ஆழியாறு அணை: குரங்கு அருவி

•டாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்)

•வால்பாறை நல்ல மலை வாழிடம்

•கோவைக் குற்றாலம் - கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் உள்ள ஓர் அருவி

நமது கோவை !

CONTRIBUTED BY:

HARI SHANJANA 8D

64