creativityschool creative corner1 | Page 66

திரைக்குப் பின்னால்

1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை (என் குட்டிப் பெண்ணின் டாப் 1 இது)

2. அம்மா சேலையை மடிக்க முடியாது, அப்பா காசை எண்ண முடியாது.

3. வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு

4. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

5. வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது.

6. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

7. மழையில் பூக்கும் பூ

8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்.

9. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம்

10. வெள்ளிக் கிணத்துல தண்ணி

விடைகள்:தென்னை மரம், வானம் - நட்சத்திரம்முட்டை, ஆட்டுக்கல்,கண்கொசு,குடை, செருப்பு, வாய், தேங்காய்

-தர்ஷினி

கவிதை பூங்கொத்து

புத்தாண்டு வாழ்த்து

இறந்துபோன இறந்தகால இழப்புகளையும்

முயற்சிகளை முறியடித்த முடிந்துபோன நாட்களையும்

சிந்தனையை சிதறடித்த பொழுதுகளையும்

தலைவிதியை தடம்புரள வைத்த தருணங்களையும்

மனிதநேயத்தை மறக்கடித்த மணித்துளிகளையும்

கடினமான பாதைவகுத்த கடைசி நிமிடங்களையும்

வாழ்க்கையை வழிமாற்றிய வினாடிகளையும்

புதிதாய் பிறந்த புத்தாண்டில்

வாழ்த்தி வரவேற்று வசந்தத்தை

நம் வசமாக்கி நம் வாழ்வில் ஒளியேற்றுவோம் !

- சக்தி சுபிக்ஷா

61