creativityschool creative corner1 | Page 65

நீதியின் குரல்

. அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

. ஆழமறியாமல் காலை இடாதே.

. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

. ஈர நாவிற்கு எலும்பில்லை.

. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்

. ஏரி நிறைந்தால் கரை கசியும்.

. ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

. ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

. ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

- தர்ஷினி

நா நெகிழ் வாக்கியங்கள்

1.கும்பகோணக் குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை குப்பன் குச்சியால் குத்தியதால் குரங்கு குளத்தில் குதித்தது.

2.பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பாரு?

3.காக்கா காக்கான்னு கத்திறதினால ‘காக்கா’ன்னு பேரு வந்ததா?

4.‘காக்கா’ன்னு பேரு வந்ததினால காக்கா காக்கான்னு கத்துதா?

5.கிழட்டுக் கிழவன் வியாழக் கிழமை சடு குடு விளையாட குடு குடு வென ஓடி வாழைப் பழ தோலில் வழுக்கி விழுந்தான்.

6.கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

7.ஓடற நரியில ஒரு நரி கிழ நரி உருளுது புரளுது.

8.பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு.

9.பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.

10.ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல.

- சக்தி சுபிக்ஷா

60