எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 90

கல்வி நிதி உதவி NUS TLS Trust Fund சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை இந்திய சமூகத்திலுள்ள அனைத்து வயதினருக்கும் உதவ வேண்டும் என்று நம்புகின்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வசதிக் குறைந்த NUS இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை மென்மேலும் சீராகத் தொடர, தமிழ்ப் பேரவை கல்வி நிதியுதவித் திட்டம் ஒன்றை 1999ம் ஆண்டு தொடங்கியது. இதுவரை $2000 வட்டியில்லா கடன் உதவிப் பெற்ற பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் இத்திட்டம் பேருதவியாக இருந்து வந்துள்ளது. $30,000 வெள்ளியை முதலாகப் போட்டுத் தொடங்கிய இத்திட்டத்திற்கான நிதி சேகரிப்பு "சங்கே முழங்கு" நிகழ்ச்சியின் மூலம்தான் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கான செலவுத்தொகை உயர்ந்து வரும் நிலையில் எங்களால் இயன்றவரை பல உதவிகளைச் செய்து கொண்டு வருகிறோம். அவற்றுள் இந்நிதியுதவித் திட்டமும் ஒன்று. நாளைய தலைமுறையினரை நல்ல கல்வித்திறனுடன் வளர்க்கத் தமிழ்ப் பேரவை செய்துவரும் இத்தொண்டு உறுதியாகப் பன்மடங்கு வளரும் என நம்புகிறோம். NUS Tamil Language Society’s (NUS TLS) attempt in reaching out to the community is further manifested through its efforts in providing interest-free loans through the NUS TLS Trust Fund to needy Indian undergraduates who are currently pursuing degree courses in the National University of Singapore. Since its inception in 1999, NUS TLS Trust Fund, administered by Singapore Indian Education Trust (SIET), has supported more than 10 needy Indian undergraduates. The interest-free loan of $2000 has surely made a difference to those undergraduates’ tertiary education. It is notable that replenishing the trust fund is highly facilitated through the proceeds that the society receives 88 NUS Tamil Language Society 35th Executive Committee from its biennial production, Sangae Muzhangu. With the cost of tertiary education rising over the years, NUS Tamil Language Society hopes to alleviate these costs, to a small extent, by providing these interest-free loans to needy Indian undergraduates so that they may experience a smoother journey in their varsity experience. This initiative allows the society to hold steadfast its objective of reaching out to all borders of the community. NUS Tamil Language Society sincerely hopes to continue this small gesture in the years to come in order to help as many Indian undergraduates as possible.