எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Page 56

ஆய்வுக்கட்டுரைப் படைப்பாளர்கள் | P A P E R P R E S E N T E R S பச்சை வெள்ளை சிவப்பு சிங்கைத் தமிழன் டா! The medley of religions amongst Singaporean Tamilians குமாரி படாரியா அப்துல் லதிஃப்் Ms Badariah Year 2, History National University of Singapore The topic for my research paper is focusing on Tamil language and religion in Singapore. Religion, particularly in Singapore has been perceived as or usually presented as a divisive factor in the country. There is an increased state and community level effort to unite people in Singapore as we are a multi- religious country. Thus, through my research paper, I would like to convey the role of Tamil in uniting people of different religious groups and also how the Tamil language has been a significant factor in blurring the religious line and being able to bring young people together by emphasizing on their linguistic identity. 54 NUS Tamil Language Society 35th Executive Committee அய்யன் வள்ளுவரின் வாய்மொழி என்று ப�ோற்றப்படும் தமிழ்மொழி, தேம்பாவனியிலும் பவனி வரும் ப�ொன்மொழி, உமரு புலவர் இயற்றிய செம்மொழி, சிங்கப்பூரிலும் பல மதத்தைச் சேர்ந்த இளையர்களை ஒன்று சேர்க்கிறது. பச்சை, வெள்ளை, சிவப்பு சிங்கைத் தமிழர்களை, குறிப்பாக தமிழ் இளையர்களை ஒன்றிணைக்கும் ஓர் உன்னத சக்தியாக தமிழ்மொழி திகழ்ந்து வருகிறது. எனது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, "பச்சை, வெள்ளை, சிவப்பு சிங்கைத் தமிழன் டா!". இத்தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நிறங்களும், சிங்கப்பூரில் உள்ள மூன்று முக்கிய சமயத்தினரைக் குறிக்கின்றன. பச்சை வண்ணம் சிங்கையில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கான ஒரு குறியீடாக நான் எடுத்துக்காட்டுகின்றேன். வெள்ளை நிறம், சிங்கையில் வாழும் கிறிஸ்துவ சமயத்தைச் சார்ந்த மக்களுக்கான ஒரு குறியீடாகும். சிங்கையில் வாழும் இந்து மக்களை குறிக்க நான் சிவப்பு நிறத்தைக் குறிப்பிட்டுள்ளேன். தமிழ்மொழி இளையர்களைச் ஒன்று சேர்ப்பத�ோடு தங்களது மதக் கூறுகளைப்பற்றியும் மிகத் தெளிவாக புரிந்துக்கொள்ள பேருதவியாக அமைகின்றது. தமிழ்மொழியில் பேசவே தயங்கும் சிங்கை இளையர்களையா, தமிழ்மொழி தங்களது மதங்கள�ோடு ஒன்றிணைக்கின்றது? இது ப�ோன்ற வினாக்களும் ஐயங்களும் பலரின் மனங்களில் எழலாம். இத்தகைய சர்ச்சைக்குரிய கேள்விகளையே எனது ஆய்வுக் கட்டுரை தகர்த்தெரிய இருக்கிறது.