ஆசியான் கவிஞர் க.து.மு. இக்பால் அவர்கள்
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டிற்காக
பிரத்யேகமாக எழுதிய கவிதை.
கவிஞர் அவர்களுக்குத் தமிழ்ப் பேரவையின் மனமார்ந்த நன்றி.
தமிழ்
This poem was penned specially for the
Singapore Tamil Youth Conference 2014 by
South East Asia Write Award winner Mr K T M Iqbal.
NUS Tamil Language Society would like to extend our appreciation for his gesture.
இளமையும் இனிமையும் நிரந்தரமாய்
இலங்கிடும் எங்கள் செந்தமிழே - உன்னை
எழுதியும் பேசியும் பழகிவந்தால் - எங்கள்
இதயமும் உன்போல் ஒளிமயமே..................................[ இளமை ]
இளைஞர் இலக்கியம் நீயானாய் - ம�ொழிகள்
யாவுக்கும் நீயே தாயானாய் - வள்ளுவர்
வழங்கிய சிந்தனையில் வானாவாய் - குழந்தை
வாய்மொழியில் நீ தேனாவாய்.....................................[ இளமை ]
தமிழ்தமிழ் எனச்சொல்ல அமுதம்வரும் - தமிழ்
தழைத்தாலே தமிழர் வாழ்வுயரும்................................[ இளமை ]
க.து.மு.இக்பால்
30.3.2014
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை
35ம் செயற்குழு
19