எழுச்சியில் பிறந்த இளந்தீ - "EZHUCHIYIL PIRANDHA ILANTHEE" 2014 | Página 14

தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். முதற்கண் என் இளையர்கள் மத்தியில் தமிழ் மொழியின் புழக்கத்தை அதிகரிக்கவும் அதன்மீது உள்ள ஆர்வத்தை வளர்க்கவும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை கடந்த 39 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 1975ல் துவக்கம் கண்ட பேரவை, இந்திய இளையர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் அவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பற்பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த 30 ஆண்டுகளாக "சாதனா" துணைப்பாட வகுப்புகளைத் தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறது. பொது கல்வி சான்றிதழ் மேல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குச் சலுகை விலையில் தரமான துணைப்பாட வகுப்புகளை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது, தமிழ்ப் பேரவை. இவ்வாண்டு 120 மாணவர்கள் இத்தி